"பெண்கள் பெண் பிள்ளைகளை ஈன்றெடுக்க வேண்டும்" அமைச்சரவையில் இடமில்லை தலிபான்களின் தெரிவிப்பு

#Afghanistan #Women
Keerthi
4 years ago
"பெண்கள் பெண்  பிள்ளைகளை ஈன்றெடுக்க வேண்டும்" அமைச்சரவையில் இடமில்லை தலிபான்களின் தெரிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். இந்நிலையில் எங்களது அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் இல்லை எனவும், பெண்கள் பிள்ளைகளை தான் ஈன்றெடுக்க வேண்டும் எனவும் தலிபான் செய்தி தொடர்பாளர் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமி தெரிவித்துள்ளார். 

தலிபான் ஆட்சியில் பெண்கள் அமைச்சரவையில் ஏன் இடம் பெறவில்லை என TOLO நியூஸ் அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தது. அப்போது பதிலளித்து பேசிய அவர், “ஒரு பெண் எப்போதும் அமைச்சராக முடியாது. அது அவர்களால் முடியாத காரியம். அவர்களை அமைச்சரவையில் இடம் பெற செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் பிள்ளைகளை தான் ஈன்றெடுக்க வேண்டும். ஆப்கனில் போராடி வரும் பெண் போராட்டக்காரர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களையும் சார்ந்தவர்கள் எனவும் சொல்ல முடியாது” என பதில் அளித்துள்ளார். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல நாங்கள் இப்போது இல்லை என தலிபான்கள் விளக்கம் கொடுத்திருந்தனர். ஆனால் பெண்கள் குறித்து அவர்கள் இப்படி கருத்து சொல்லி இருப்பது அவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!